Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 09 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான, இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், கொழும்பு ஆர் பிரேம்தாஸ மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா, தொடரை 2-0 என்ற ரீதியில் கைப்பற்றியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், தனஞ்சய டி சில்வா 62(50) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், ஜேம்ஸ் போக்னர், அடம் ஸாம்பா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும் ஜோன் ஹேஸ்டிங்ஸ் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
129 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 17.5 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், கிளென் மக்ஸ்வெல் 66(29) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சச்சித் பத்திரண, தனது இறுதி சர்வதேசப் போட்டியில் விளையாடிய திலகரட்ண டில்ஷான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் கிளென் மக்ஸ்வெல் தெரிவானார்.
10 minute ago
42 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
42 minute ago
50 minute ago