Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரின்இரண்டாவது போட்டியில், தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்று, அத்தொடரையும் கைப்பற்றியுள்ளது.
கட்டாக்கில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணி, 17.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 92 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
முதலாவது விக்கெட்டுக்காக 28 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும், அதன் பின்னர் விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டிருந்தன.
துடுப்பாட்டத்தில், றோகித் ஷர்மா, சுரேஷ் ரெய்னா இருவரும் தலா 22 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில், அல்பி மோர்க்கல் 3, கிறிஸ் மொறிஸ், இம்ரான் தாஹிர் இருவரும் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
93 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 17.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் ஜே.பி டுமினி ஆட்டமிழக்காமல் 30 (39), ஏ.பி.டி வில்லியர்ஸ் 19 (21) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டியின் நாயகனாக அல்பி மோர்க்கல் தெரிவானர்.
5 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
04 Apr 2026