Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, அத்தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
சிட்டகொங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பங்களாதேஷ் அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் முஷ்பிக்கூர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 67 (62), சபீர் ரஹ்மான் 49 (46), இம்ருல் கைய்ஸ் 46 (58), தமிம் இக்பால் 45 (68), மொசாடிக் ஹொஸைன் ஆட்டமிழக்காமல் 38 (39) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அடில் றஷீட், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
278 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 47.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றிபெற்றது. துடுப்பாட்டத்தில் பென் டக்கற் 63 (68), சாம் பில்லிங்ஸ் 62 (69), பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 47 (48), ஜேம்ஸ் வின்ஸ் 32 (37), கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 27 (18) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மஷ்ரபி மோர்தஸா, ஷபியுல் இஸ்லாம் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, அடில் றஷீட் தெரிவானதோடு, தொடரின் நாயகனாக, பென் ஸ்டோக்ஸ் தெரிவானார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago