2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

தென்னாபிரிக்காவைத் தோற்கடித்தது ஜப்பான்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

றக்பி உலகக் கிண்ணப் போட்டிகளின் வரலாற்றிலேயே ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சிகளில் ஒன்றாக, இரண்டு தடவைகள் சம்பியன் பட்டம் வென்ற தென்னாபிரிக்க அணியை, ஜப்பான் அணி தோற்கடித்துள்ளது.

குழு 'பி"க்கான போட்டியாக இப்போட்டி, சனிக்கிழமை பின்னிரவு இடம்பெற்றிருந்தது.
13ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள ஜப்பான் அணியை, இம்முறை கிண்ணம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாகக் கருதப்படும் தென்னாபிரிக்க அணி சந்தித்த போது, தென்னாபிரிக்க அணிக்கு இலகுவான வெற்றி கிடைக்கப்பெறுமென எதிர்பார்க்கப்பட்டது.

ஆரம்பம் முதலே இறுக்கமாக இடம்பெற்ற போட்டியில், பாதி நேர முடிவின் போது தென்னாபிரிக்க அணி 12-10 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது. எனினும், இரண்டாவது பாதியில் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்திய ஜப்பான், ஆக்ரோஷமான ஆட்டமுறையைக் கையாண்டது. இறுதியில் அவ்வணி, 34-32 என்ற புள்ளிகள் கணக்கில் தென்னாபிரிக்காவை வெற்றிகொண்டது.

ஜப்பானின் அயுமு கொரொமரு, 24 புள்ளிகளைப் பெற்றார். இப்போட்டியின் சிறந்த வீரராக, ஜப்பானின் புமியாகி தனாகா தெரிவானார்.

இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், டொங்காவை எதிர்கொண்ட ஜோர்ஜியா, 17-10 என்ற புள்ளிகள் கணக்கிலும் கனடாவை எதிர்கொண்ட அயர்லாந்து, 50-7 என்ற புள்ளிகள் கணக்கிலும் இத்தாலியை எதிர்கொண்ட பிரான்ஸ், 32-10 என்ற புள்ளிகள் கணக்கிலும் வெற்றிபெற்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .