Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 27 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வெற்றி தோல்வியற்ற முடிவுக்கு இங்கிலாந்து நெருங்கிய போதிலும், அப்போட்டியில் வெற்றி தோல்வியற்ற முடிவைப் பெறுவதற்கு, இங்கிலாந்துக்குத் தகுதியிருந்திருக்கவில்லையென, அவ்வணியின் தலைவர் அலஸ்டெயர் குக் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இங்கிலாந்தின் கடைசிநிலை வீரர்கள் சிறப்பாகப் போராடி, இறுதியில் 6.3 ஓவர்கள் இருக்கையிலேயே இறுதி விக்கெட் வீழ்த்தப்பட்டிருந்தது.
எனினும், போட்டியின் மூன்றாம் நாளன்று, 3 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களுடன் காணப்பட்ட இங்கிலாந்து அணி, அடுத்த 7 விக்கெட்டுகளையும் 36 ஓட்டங்களுக்கு இழந்தமை குறித்து அலஸ்டெயர் குக், கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இவ்வாறான ஆட்டமிழப்புகள் அடிக்கடி நடப்பதாக எண்ணுவதாகத் தெரிவித்த குக், வஹாப் றியாஸ் சிறப்பாகப் பந்துவீசியிருந்த போதிலும், ஒரு விக்கெட்டை இழப்பது அனுமதிக்கப்படக்கூடியது எனவும், மாறாக ஆறு அல்லது ஏழு விக்கெட்டுகளை இழக்க முடியாது எனத் தெரிவித்தார்.
8ஆவது விக்கெட்டை இழந்த போது, இன்னமும் 40 ஓவர்கள் காணப்பட்ட நிலையில், போட்டியில் தோல்வியைத் தவிர்ப்பது கடினமானதொன்றாகவே காணப்பட்டது எனத் தெரிவித்த அவர், அதன் பின்னர் ஓரளவு நம்பிக்கை வந்த போதிலும், மூன்றாவது நாளில் வெளிப்படுத்திய திறமைகளின் காரணமாக, தோல்வியைத் தவிர்ப்பதற்குத் தகுதியானவர்களாகத் தாம் இருக்கவில்லை என எண்ணுவதாகத் தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
8 hours ago