Shanmugan Murugavel / 2021 மே 10 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களின் டென்னிஸ் சங்க தனிநபருக்கான தரவரிசையில் நான்காமிடத்துக்கு, பெலாரஸின் அர்ய்னா சபலெங்கா முன்னேறியுள்ளார்.
மட்ரிட் பகிரங்கத் தொடரில் சம்பியனானதைத் தொடர்ந்தே, ஏழாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி நான்காமிடத்தை சபலெங்கா அடைந்துள்ளார்.
இதேவேளை, குறித்த தொடரில் காலிறுதிப் போட்டி வரை முன்னேறிய செக் குடியரசின் பெற்றா குவிற்றோவா, 12ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 வீராங்கனைகளின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில், குறிப்பிட்ட தொடரில் இரண்டாம் சுற்று வரை முன்னேறிய ரஷ்யாவின் டனில் மெட்வெடெவ், தொழில்முறை டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தை அடைந்துள்ளார்.
இதேவேளை, இத்தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இத்தாலியின் மட்டியோ பெரெட்டனி, 10ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 வீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
26 minute ago
50 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
50 minute ago
52 minute ago