Editorial / 2026 ஏப்ரல் 15 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ்
கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தலைமையில், 'தலைவர் கிண்ணம் 2026' மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி முதன்முறையாக மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கொட்டகலை பிரதேச சபையின் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த ஏப்ரல் 11 முதல் 13 ஆம் திகதி வரை இப்போட்டிகள் இடம்பெற்றன. சபையின் எல்லைக்குட்பட்ட 10 வட்டாரங்களிலிருந்து 40 அணிகள் இச்சுற்றுப்போட்டியில் பங்கேற்றன.
இறுதிப் போட்டி: விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதிச் சுற்றுக்கு குடாகம லயன்ஸ் ஸ்டார், கொட்டகலை வூட்டன், கூம்வுட் உதிரம் மற்றும் கிரேட்வெஸ்டர்ன் ஆஷேஸ் ஆகிய அணிகள் தெரிவாகின. இறுதியில், குடாகம லயன்ஸ் ஸ்டார் மற்றும் கொட்டகலை வூட்டன் ஆகிய அணிகளுக்கிடையே இறுதிப் போட்டி நடைபெற்றது.
இதில் திறமைகளை வெளிப்படுத்திய கொட்டகலை வூட்டன் அணியினர் வெற்றி பெற்று 'தலைவர் கிண்ணத்தை' சுவீகரித்தனர். குடாகம லயன்ஸ் ஸ்டார் அணியினர் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டனர்.
பரிசளிப்பு: வெற்றி பெற்ற கொட்டகலை வூட்டன் அணியினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் தவிசாளர் ராஜமணி பிரசாந்தினால் வழங்கி வைக்கப்பட்டன. இரண்டாம் இடத்தைப் பெற்ற அணிக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணப்பரிசினை பிரதேச சபை உறுப்பினர் லெட்சுமன் விஸ்வநாதன் வழங்கினார்.
இந்நிகழ்வில் பிரதேச சபையின் உப தவிசாளர், உறுப்பினர்கள், செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.










15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026