Editorial / 2019 ஒக்டோபர் 08 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் ஏழாமிடத்துக்கு, தென்னாபிரிக்காவின் விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக் முன்னேறியுள்ளார்.
இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 111 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே, 11ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

இதேவேளை, பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் எட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியாவின் இரவிச்சந்திரன் அஷ்வின், 14ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில், தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, 70 ஓட்டங்களைப் பெற்றிருந்த இந்தியாவின் இரவீந்திர ஜடேஜா, சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்திலிருந்து ஒரு இடம் முன்னேறி இரண்டாமிடத்தை அடைந்துள்ளார். இதேவேளை, ஆறாமிடத்திலிருந்த இரவிச்சந்திரன் அஷ்வின், ஒரு இடம் முன்னேறி ஐந்தாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
6 hours ago
6 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
12 Apr 2026