Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் சர்வதேச போட்டிகள், நான்கு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாட இந்திய அணி திட்டமிட்டிருந்த நிலையில், இருபதுக்கு 20 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் மாறுபாடு உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதனால், இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் பி.சி.சி.ஐ.யின் வருடாந்த பொதுக்குழு கூட்டம் தலைவர் கங்குலி தலைமையில் கொல்கத்தாவில் நடைபெற்றது. பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா உட்பட அதன் முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தென் ஆபிரிக்கா அணியுடனான தொடர், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள், ஒமிக்ரோன் அச்சுறுத்தல் உட்பட தற்போதைய சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் போட்டி நடைபெறும் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார்.
இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பி.சி.சி.ஐ உறுதி செய்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
23 minute ago
30 minute ago