Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி, பெங்களூருவில் நாளை இரவு7 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
இறுதிப் பந்துவரை சென்ற இத்தொடரின் முதலாவது போட்டியை இறுதியில் அவுஸ்திரேலியா வென்ற நிலையில், இப்போட்டியையும் வென்று தொடரைக் கைப்பற்ற அவுஸ்திரேலியா எதிர்பார்க்கின்றது.
எவ்வாறெனினும், முதலாவது போட்டியை விட அதிக ஓட்டங்கள் பெறப்படுமென இந்த இரண்டாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறப்படுமென எதிர்பார்க்கப்படுகையில், முதலாவது போட்டியில் இலகுவாக வெல்லும் நிலையில் இருந்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது அவுஸ்திரேலியாவுக்கு ஓர் பின்னடைவாகக் காணப்படுகிறது.
அந்தவகையில், குறித்த தவறை திருத்திக் கொண்டு இப்போட்டியில் இந்தியாவை வெல்வதற்கு, முதலாவது போட்டியில் விளையாடிய அதேயணியே களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, ஜஹை றிச்சர்ட்ஸனுக்குப் பதிலாக கேன் றிச்சர்ட்ஸன் களமிறங்கும் வாய்ப்புக் காணப்படுகிறது.
மறுபக்கமாக, முதலாவது போட்டியில் தோற்ற இந்தியா, தொடரை இழப்பதைத் தவிர்க்க நிச்சயமாகப் போராடும் என நம்பலாம். எவ்வாறாயினும், சுழற்சிமுறையின்படி, ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு ஷீகர் தவான் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, முதலாவது போட்டியில் ஓட்டங்களை வழங்கிய உமேஷ் யாதவ்வுக்குப் பதிலாக, சிதார்த் கோல் களமிறங்கும் வாய்ப்புக் காணப்படுகிறது.
இந்நிலையில், றிஷப் பண்டுக்குப் பதிலாக விஜய் ஷங்கர் களமிறங்கக்கூடிய வாய்ப்பும் காணப்படுவதோடு, அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இந்தியக் குழாமில் இடம்பெற்றிருக்காத தினேஷ் கார்த்திக்கு, தனது துடுப்பால் தேர்வாளர்களுக்கு பதிலளிக்கக் கூடிய இறுதி வாய்ப்பாக குறித்த போட்டி காணப்படுகின்றது.
இதேவேளை, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் மூன்றாமிடத்திலுள்ள அவுஸ்திரேலியா, தமது மூன்றாமிடத்தைத் தக்க வைப்பதற்கு இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திலுள்ளது. இப்போட்டியில் தோற்றால், தரவரிசையில் ஐந்தாமிடத்துக்கு அவுஸ்திரேலியா கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago