Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 நவம்பர் 05 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது பார்படோஸில் நாளை இரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வென்ற நிலையில் தீர்மானமிக்க இப்போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்டவீரர்களை குறிப்பாக அணித்தலைவர் லியம் லிவிங்ஸ்டோனைக் கட்டுப்படுத்துவதிலேயே தொடரின் முடிவு தங்கியுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளைப் பொறுத்த வரையில் ஷாமர் ஜோசப்புக்குப் பதிலாக அல்ஸாரி ஜோசப் களமிறங்குவாரென எதிர்பார்க்கப்படுவதோடு, ஜேடன் சியல்ஸை றொமாரியோ ஷெப்பர்ட் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
மறுபக்கமாக இங்கிலாந்து அணியில் ஜோர்டான் கொக்ஸ் இரண்டு போட்டிகளிலும் பிரகாசித்திருக்காத நிலையில் மிஷெல் பெப்பர் மூலம் அவரைப் பிரதியிடக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago