2025 மே 21, புதன்கிழமை

தொடரையும் இழந்தது இலங்கை

Editorial   / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் தென்ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது இருபதுக்கு 20 போட்டியில் 9 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற தென்ஆபிரிக்க அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.1 ஓவர்களில் 103 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் குசல் பெரோரா 30(25), பானுக ராஜபக்ஷ 20(13) ஓட்டங்களைப் பெற்றதுடன், தென்ஆபிரிக்க அணியின் பந்துவீச்சில் மக்ரம், ஷம்ஷி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 14.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் குயின்டென் டி கொக் 58(48) ஏய்டென் மக்ரம் 21(19) ஓட்டங்களை பெற்றதுடன், வனிது ஹசரங்க விக்கெட் ஒன்றை வீழ்த்தினார்.

டப்ரைஸ் ஷம்ஷி போட்டியின் சிறப்பாட்டக் காரராக தெரிவு செய்யப்பட்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X