Shanmugan Murugavel / 2021 ஜனவரி 06 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியானது சிட்னியில் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
கடந்த போட்டியில் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா தொடரை வெற்றி கொள்வதற்கு இப்போட்டியில் மீளெள வேண்டியுள்ளது. அந்தவகையில், துடுப்பாட்டத்தில் மேம்படுத்தப்பட பெறுபேற்றை வெளிக்காட்ட வேண்டியுள்ளது.
ஆக, ஸ்டீவ் ஸ்மித்திடமிருந்து மேம்படுத்தப்பட்ட பெறுபேறு எதிர்பார்க்கப்படுவதுடன், களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படும் டேவிட் வோணர், வில் புக்கொவ்ஸ்கி இணையும் சிறப்பான ஆரம்பத்தை வழங்க வேண்டியுள்ளது.
ஜோ பேர்ண்ஸ், ட்ரெவிஸ் ஹெட்டை வோர்னரும், புக்கொவ்ஸ்கியும் பிரதியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியூ வேட் தனது பழைய மத்திய வரிசை நிலைக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கமாக, உமேஷ் யாதவ்வுக்குப் பதில் நவ்தீப் சைனி டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதோடு, ஓடங்களைப் பெறத் தடுமாறி வரும் மாயங்க் அகர்வாலுக்குப் பதிலாக ரோஹித் ஷர்மா களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago