Shanmugan Murugavel / 2016 நவம்பர் 29 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியில், நியூசிலாந்து அணிக்கு அதிரடியான வெற்றி கிடைத்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில், இறுதி நேரத்தில் அவ்வணி சிறப்பான வெற்றியைப் பெற்றுக் கொண்டது.
நியூசிலாந்து அணி விதித்த 369 ஓட்டங்கள் என்ற இலக்கு அல்லது நாள் முழுவதும் துடுப்பெடுத்தாடுதல் என்ற இரண்டு தெரிவுகளுடன், இன்றைய நாளை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி, மிகவும் பொறுமையாக விளையாடியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான அஸார் அலி, சமி அஸ்லம் இருவரும், 60 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 131 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தொடர்ந்தும் பொறுமையாக விளையாடிய பாகிஸ்தான் அணி, தேநீர்பான இடைவேளையின் போது, 67 ஓவர்களில் 158 ஓட்டங்களைப் பெற்று ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. சுமார் 40 ஓவர்கள் மாத்திரம் எஞ்சிக் காணப்பட்ட நிலையில், போட்டியை வெற்றி - தோல்வியின்றி முடித்துக் கொள்ளும் வாய்ப்பு, பாகிஸ்தானுக்குப் பிரகாசமாகவே காணப்பட்டது.
ஆனால், தேநீர் இடைவேளைக்குப் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி, இறுதி 9 விக்கெட்டுகளையும் 71 ஓட்டங்களுக்கு இழந்தது. இறுதி 8 விக்கெட்டுகளும் 49 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களைச் சேராத எந்த வீரரும் பொறுப்பை உணர்ந்து விளையாடாத நிலையில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் தவிர ஏனைய எவரும், 20 ஓட்டங்களைக் கூடப் பெறவில்லை.
இப்போட்டியின் நாயகனாக, நியூசிலாந்தின் டிம் சௌதி தெரிவானார்.
முதலாவது போட்டியிலும் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
ஸ்கோர் விவரம்...
நியூசிலாந்து: 271/10 (துடுப்பாட்டம்: ஜீற் றாவெல் 55, பி.ஜே. வற்லிங் ஆ.இ 49, கொலின் டி கிரான்ட்ஹொம்மெ 37, றொஸ் டெய்லர் 37 ஓட்டங்கள். பந்துவீச்சு: சொஹைல் கான் 4/99, இம்ரான் கான் 3/52, மொஹமட் ஆமிர் 2/59.)
பாகிஸ்தான்: 216/10 (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் ஆ.இ 90, சப்ராஸ் அஹ்மட் 41, சொஹைல் கான் 37 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் சௌதி 6/80, நீல் வக்னர் 3/59.)
நியூசிலாந்து: 313/5 (துடுப்பாட்டம்: றொஸ் டெய்லர் ஆ.இ 102, டொம் லேதம் 80, கேன் வில்லியம்ஸன் 42 ஓட்டங்கள். பந்துவீச்சு: இம்ரான் கான் 3/76)
பாகிஸ்தான்: 230/10 (துடுப்பாட்டம்: சமி அஸ்லம் 91, அஸார் அலி 58 ஓட்டங்கள். பந்துவீச்சு: நீல் வக்னர் 3/57, மிற்சல் சான்ட்னெர் 2/49, டிம் சௌதி 2/60.)
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago