Shanmugan Murugavel / 2016 ஜனவரி 05 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து அணி, 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இத்தொடரைச் சமப்படுத்தும் வாய்ப்பு இலங்கைக்குக் காணப்பட்ட போதிலும், முக்கியமான தருணங்களில் சிறப்பான திறமையை, அவ்வணி வெளியிட்டிருக்கவில்லை.
முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி, 50 ஓவர்களின் நிறைவில் 294 ஓட்டங்களைக் குவித்தது. முதலாவது விக்கெட்டை 3 ஓட்டங்களுக்கே இழந்த போதிலும், இரண்டாவது விக்கெட்டுக்காக 123 ஓட்டங்களும் 3ஆவது விக்கெட்டுக்காக 81 ஓட்டங்களும் குவிக்கப்பட, அவ்வணி முன்னிலையைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் மார்ட்டின் கப்டில் 102 (109), றொஸ் டெய்லர் 61 (67), கேன் வில்லியம்ஸன் 61 (72), லூக் றொங்கி ஆட்டமிழக்காமல் 37 (31) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் நுவான் குலசேகர, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
295 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, 9.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 33 ஓட்டங்களுடன் தடுமாறிய போதிலும், 4ஆவது விக்கெட்டுக்காக 93 ஓட்டங்கள் பகிரப்பட்டன. டினேஷ் சந்திமால் ஆட்டமிழக்க, 6ஆவது விக்கெட்டுக்காக 62 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன. ஆனால், சிறப்பாக விளையாடி மிலிந்த சிரிவர்தன ஆட்டமிழக்க, பின்னர் இறுதி நேரத்தில் அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்க, 47.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களை மாத்திரம் இலங்கை பெற்றது.
துடுப்பாட்டத்தில் அஞ்சலோ மத்தியூஸ் 95 (116), டினேஷ் சந்திமால் 50 (65), மிலிந்த சிரிவர்தன 39 (33) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மற் ஹென்றி 5, ட்ரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, மற் ஹென்றி தெரிவானார்.
5 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
04 Apr 2026