2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

நியூசிலாந்துக்கெதிராக முன்னிலையில் இந்தியா

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 02 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் 3ஆம் நாள் முடிவில், இந்திய அணி முன்னிலையைப் பெற்றுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், 7 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களுடன் இன்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பித்த நியூசிலாந்து அணி, 204 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 9ஆம் நிலை வீரரான ஜீதன் பட்டேல், பெற்ற வேகமாக ஓட்டங்கள், நியூசிலாந்துக்கு ஓரளவு கௌரவத்தினை வழங்கின.

துடுப்பாட்டத்தில் ஜீதன் பட்டேல் 47, றொஸ் டெய்லர் 36, லூக் றொங்கி 35 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 5, மொஹமட் ஷமி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

112 ஓட்டங்களால் முன்னிலை வகித்த நிலையில், தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, இன்றைய நாள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றது. ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி சார்பாக, றோகித் ஷர்மாவும் ரிதிமான் சகாவும், 103 ஓட்ட இணைப்பாட்டத்தைப் புரிந்தனர்.

துடுப்பாட்டத்தில் றோகித் ஷர்மா 82, விராத் கோலி 45, ரிதிமான் சகா ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மற் ஹென்றி, மிற்சல் சான்ட்னெர் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் ட்ரென்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்படி, 2 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில், இந்திய அணி 339 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .