Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 21 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து அணிக்கெதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் முச்சதம் பெற்ற கருண் நாயரையும், அப்போட்டியில் 199 ஓட்டங்களைப் பெற்ற லோகேஷ் ராகுலையும், இந்திய அணித் தலைவர் விராத் கோலி புகழ்ந்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்திவந்த அஜின்கியா ரஹானே போன்ற துடுப்பாட்ட வீரருக்குப் பதிலாக விளையாடிய கருண் நாயர், மிகச்சிறப்பாகத் தன்னை வெளிப்படுத்தினார் என கோலி தெரிவித்தார்.
இந்திய அணிக்குள் வீரர்கள் வரும் போது, போட்டிகளில் விளையாடக் கூடிய தகுதியுடன் அவர்கள் வர வேண்டுமென எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த அவர், திறமை அடிப்படையிலும் மனதின் உறுதித் திறன் அடிப்படையிலும், இந்த நிலையை எதிர்பார்ப்பதாகவும், அத்தோடு உடற்றகுதி தொடர்பாகக் கவனம் செலுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
7 minute ago
39 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
39 minute ago
47 minute ago