2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

நாளை ஆரம்பிக்கிறது முதல் டெஸ்ட்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 08 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இந்தியாவில் இடம்பெறும் டெஸ்ட் தொடரில், இந்திய அணி இலகுவாக வெற்றிபெறுமென்பது, வழக்கமான ஓர் எதிர்பார்ப்பாகும். ஆனால் 2012ஆம் ஆண்டில், 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்ற பின்னர், நாளை ஆரம்பிக்கும் 5 போட்டிகள் கொண்ட தொடர், சிறிதளவு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய ஒன்றாகக் காணப்படுகிறது.

முதலாவது போட்டி, ராஜ்கொட்டில் இடம்பெறவுள்ளது. ராஜ்கொட்டில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டி இதுவாகும். இப்போட்டி, காலை 9:30 மணிக்கு ஆரம்பிக்கும்.

கடந்த முறை விளையாடிய இங்கிலாந்து அணியைப் போலல்லாது, அனுபவம் குறைந்த அணியாகவே அவ்வணி களமிறங்குகிறது. துடுப்பாட்டத்தில் மாத்திரமன்றி, சுழற்பந்து வீச்சிலும் அவ்வணியின் வீரர்கள், அனுபவமற்றவர்களாகவே காணப்படுகின்றனர். தவிர, பங்களாதேஷ் அணிக்கெதிராகப் பெற்ற வெற்றியின் பின்னணியில், அவ்வணி களமிறங்குகிறது.

நாளை ஆரம்பிக்கும் போட்டியில், 19 வயதான ஹசீப் ஹமீட், தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பங்களாதேஷ் தொடரில் சறுக்கிய கரி பலன்ஸ், விளையாடும் பதினொருவரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியா சார்பாக ஹார்டிக் பாண்டியா அல்லது கருண் நாயர், தங்களத அறிமுகத்தை மேற்கொள்ளவுள்ளனர். ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து, இவர்களின் தெரிவு இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .