2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

நாளை ஆரம்பிக்கிறது மூன்றாவது போட்டி

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 06 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்டடெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி, நாளை சனிக்கிழமை இந்தூரில் ஆரம்பிக்கிறது. இப்போட்டியுடனேயே, இந்தூர், டெஸ்ட் மைதானமாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இரண்டாவது போட்டியில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய புவனேஷ்வர் குமார், குழாமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை, ஓரளவு எழும்பி வரும் பந்துகளை வழங்கக் கூடிய இந்தூர் ஆடுகளத்தில் இந்திய அணிக்கு இழப்பாகவே கருதப்படுகிறது. இந்தியாவில் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டிகளை கருத்திற் கொண்டு ஷர்டுல் தாக்கர் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்ற போதும், தரவரிசையில், தற்போது முதலிடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது ஆதிக்கத்தை நீடித்துக் கொள்ளும் பொருட்டு, வேகமாகப் பந்துவீசக் கூடிய உமேஷ் யாதவ்வையே அணியில் இணைத்துக் கொள்ள அதிக வாய்ப்புகள் காணப்படுகிறது.

காயமடைந்த ஷீகர் தவானுக்குப் பதிலாக கௌதம் கம்பீர் அணியில் இடம்பெற்று, இரண்டு வருடங்களின் பின்னர், அணியில் மீள்வருகையை நிகழ்த்தக் கூடிய சாத்தியம் உண்டு. தவிர, இத்தொடரில், அதிகமாக  ஓட்டங்களைக் குவிக்காத விராத் கோலியும் ஓட்டங்களை குவிக்க எதிர்பார்ப்போடு இருப்பார்.

மறுபக்கத்தில், உடல் நலமில்லை காரணமாக இரண்டாவது போட்டியில் விளையாடாத நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன், இப்போட்டியில் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .