Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் சனிக்கிழமை (09) நடைபெற்ற அவ்வணியுடனான சிநேகபூர்வ போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது.
அத்லெட்டிகோ சார்பாக ஜூலியன் அல்வரேஸ், அந்தோனி கிறீஸ்மன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் அயர்லாந்தில் நடைபெற்ற பிறீமியர் லீக் கழகமான லீட்ஸ் யுனைட்டெட், இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனுக்கிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இதேவேளை பிறீமியர் லீக் கழகமான எவெர்ற்றனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இன்னொரு சீரி ஏ கழகமான றோமா வென்றது.
இதுதவிர தமது மைதானத்தில் நடைபெற்ற இன்னொரு சீரி ஏ கழகமான பியொரென்டினாவுடனான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் வழமையான நேரத்தில் சமநிலையில் முடிவடைந்த நிலையில் பெனால்டியில் 5-4 என்ற ரீதியில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.
19 minute ago
26 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
43 minute ago