Shanmugan Murugavel / 2022 நவம்பர் 20 , பி.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டியில் இந்தியா வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியானது மழையால் கைவிடப்பட்ட நிலையில், மெளன்ட் மகட்டரேயில் இன்று நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, சூரியகுமார் யாதவ்வின் ஆட்டமிழக்காத 111 (51) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது. இறுதி ஓவரின் மூன்றாம், நான்காம், ஐந்தாம் பந்துகளில் பதிலணித்தலைவர் ஹர்டிக் பாண்டியா, தீபக் ஹூடா, வொஷிங்டன் சுந்தரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய டிம் செளதி, ஹட்-ட்ரிக் சாதனையைப் படைத்தார்.
பதிலுக்கு 192 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, ஆரம்பத்திலிருந்தே புவ்னேஷ்வர் குமார், வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால் (2), தீபக் ஹூடா (4), மொஹமட் சிராஜ்ஜிடம் (2) குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களையே பெற்று 65 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், வில்லியம்ஸன் 61 (52) ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இப்போட்டியின் நாயகனாக சூரியகுமார் யாதவ் தெரிவானார்.
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026