Shanmugan Murugavel / 2025 ஜனவரி 07 , பி.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது ஹமில்டனில் நாளை (08) 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை நியூசிலாந்து வென்ற நிலையில் தொடரைத் தக்க வைப்பதற்கு இலங்கை இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டியுள்ளது.
அந்தவகையில் துடுப்பாட்டத்தில் பதும் நிஸங்க, குசல் மென்டிஸ், அணித்தலைவர் சரித் அசலங்க உள்ளிட்டோரிடமிருந்து பாரிய பங்களிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.
அணியில் பெரும்பாலும் மாற்றமிருக்காதெனக் கருதப்படுகின்றபோதும் மகேஷ் தீக்ஷன, மொஹமட் ஷிராஸ் ஆகியோர் அணியில் இடம்பெறக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
நியூசிலாந்தைப் பொறுத்த வரையில் உபாதைக்குள்ளாகி முதற் போட்டியில் விளையாடாத டொம் லேதம் மிற்ச் ஹேயை அணியில் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago