2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நியூசிலாந்தை வெள்ளையடித்த இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2022 ஜூன் 27 , பி.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தை இங்கிலாந்து வெள்ளையடித்தது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்றிருந்த இங்கிலாந்து, லீட்ஸில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த மூன்றாவது டெஸ்டையும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என நியூசிலாந்தை வெள்ளையடித்துள்ளது.

இன்றைய ஐந்தாம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே ஒலி போப்பை 82 ஓட்டங்களுடன் டிம் செளதியிடம் இழந்தது.

எனினும், ஜோ றூட்டின் ஆட்டமிழக்காத 86, ஜொனி பெயார்ஸ்டோவின் ஆட்டமிழக்காத 71 ஓட்டங்களோடு 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில் இங்கிலாந்து வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக ஜேக் லீச்சும், இத்தொடரின் நாயகனாக இங்கிலாந்து சார்பாக றூட்டும், நியூசிலாந்து சார்பாக டரைல் மிற்செல்லும் தெரிவாகினர்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

நியூசிலாந்து: 329/10 (துடுப்பாட்டம்: டரைல் மிற்செல் 109, டொம் பிளென்டல் 55, டிம் செளதி 33, கேன் வில்லியம்ஸன் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேக் லீச் 5/100, ஸ்டூவர்ட் ப்ரோட் 3/62, மத்தியூ பொட்ஸ் 1/34, ஜேமி ஒவெர்ட்டன் 1/85)

இங்கிலாந்து: 360/10 (துடுப்பாட்டம்: ஜொனி பெயார்ஸ்டோ 162, ஜேமி ஒவெர்ட்டன் 97, ஸ்டூவர்ட் ப்ரோட் 42 ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 4/104, டிம் செளதி 3/100, நீல் வக்னர் 2/75, மிஷெல் பிறேஸ்வெல் 1/54)

நியூசிலாந்து: 326/10 (துடுப்பாட்டம்: டொம் பிளென்டல் ஆ.இ 88, டொம் லேதம் 76, டரைல் மிற்செல் 56, கேன் வில்லியம்ஸன் 48 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேக் லீச் 5/66, மத்தியூ பொட்ஸ் 3/66, ஜேமி ஒவெர்ட்டன் 1/61, ஜோ றூட் 1/29)

இங்கிலாந்து: 296/3 (துடுப்பாட்டம்: ஜோ றூட் ஆ.இ 86, ஒலி போப் 82, ஜொனி பெயார்ஸ்டோ ஆ.இ 71 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 1/68, மிஷெல் பிறேஸ்வெல் 1/109)

போட்டியின் நாயகன்: ஜேக் லீச்

தொடரின் நாயகன் (இங்கிலாந்து): ஜோ றூட்

தொடரின் நாயகன் (நியூசிலாந்து): டரைல் மிற்செல்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .