Shanmugan Murugavel / 2021 ஜூன் 03 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

போர்த்துக்கல்லில் இன்று அதிகாலை நடைபெற்ற நெதர்லாந்து, ஸ்கொட்லாந்துக்கு இடையிலான சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.
நெதர்லாந்து சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் மெம்பிஸ் டிபே பெற்றதோடு, ஸ்கொட்லாந்து சார்பாக, ஜக் ஹென்ட்றி, கெவின் நிஸ்பெட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, ஜேர்மனி, டென்மார்க்குக்கு இடையிலான சிநேகபூர்வப் போட்டியும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. ஜேர்மனி சார்பாகப் பெறப்பட்ட கோலை புளோரியன் நெயுஹோஸ் பெற்றதோடு, டென்மார்க் சார்பாகப் பெறப்பட்ட கோலை யூசுஃப் பெளல்சென் பெற்றிருந்தார்.
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026