Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூன் 17 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற குழு டி போட்டியொன்றில் நைஜீரியாவை குரோஷியா வென்றது.
குறித்த போட்டியின் 32ஆவது நிமிடத்தில் பெறப்பட்ட ஓவ்ண் கோல் மூலமாக முன்னிலை பெற்ற குரோஷியா, 71ஆவது நிமிடத்தில் வழங்கப்பட்ட பெனால்டியை தமது அணியின் தலைவராக லூகா மோட்ரிக் கோலாக்க 2-0 என்ற கோல் கணக்கில் இறுதியில் வென்றது.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற பெருவுடனான குழு சி போட்டியொன்றில், யூசுப் பெளல்சி பெற்ற கோலொன்றுடன் 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் வென்றது.
இந்நிலையில், உலகக் கிண்ணத்தில் இம்முறையே அறிமுகத்தை மேற்கொள்ளும் ஐஸ்லாந்து, நேற்று இடம்பெற்ற ஆர்ஜென்டீனாவுடனான குழு டி போட்டியொன்றை 1-1 என்ற கோல் கணக்கில் சமன்செய்தது. ஆர்ஜென்டீனா சார்பாகப் பெறப்பட்ட கோலை சேர்ஜியோ அகுரோ பெற்றதோடு, ஐஸ்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை அல்பேர்ட் பின்பொகசன் பெற்றிருந்தார். இப்போட்டியில் ஆர்ஜென்டீனாவுக்கு கிடைக்கைப் பெற்ற பெனால்டியொன்றை, அவ்வணியின் தலைவரான லியனல் மெஸ்ஸி கோலாக்கத் தவறியிருந்தார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற அவுஸ்திரேலியாவுடனான குழு சி போட்டியொன்றை 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றிருந்தது. பிரான்ஸ் சார்பாக, அன்டோனி கிறீஸ்மன், போல் பொக்பா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, அவுஸ்திரேலியா சார்பாகப் பெறப்பட்ட கோலை மிலே ஜெடினாக் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago