Shanmugan Murugavel / 2016 ஜனவரி 08 , மு.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த மாதம் இடம்பெறவுள்ள பீபா தலைவருக்கான தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என இடைநிறுத்தப்பட்டுள்ள, ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்புத் சங்கத்தின் தலைவரான மைக்கல் பிளட்டினி தெரிவித்துள்ளார்.
கால்பந்தாட்டம் தொடர்பான நடவடிக்கைகளில் பங்குபற்றுவதற்கு பீபாவின் தலைவர் செப் பிளாட்டருக்கும் பிளட்டினிக்கும் உலக கால்பந்தாட்ட ஆளும் உடலினால் எட்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு பிளட்டினிக்கு வழங்கப்பட்ட 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சம்பந்தமாக இருவரும் குற்றமிழைத்தவர்களாக கருதப்பட்டனர்.
தங்களது தடைகளுக்கு எதிராக இருவரும் மேன்முறையீடு மேற்கொண்டுள்ளபோதும், தேர்தல் பெப்ரவரி 26ஆம் திகதி நடைபெறுவதால் தான் தேர்தலில் போட்டியிடமுடியாது எனத் தெரிவித்து, பீபா தலைவருக்கான போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக பிளட்டினி தெரிவித்துள்ளார்.
5 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
04 Apr 2026