Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, மெல்பேர்ணில் இன்று (26) ஆரம்பித்திருந்த நிலையில், நேற்றைய முதலாவது நாள் ஆட்ட முடிவில் அவுஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா-உல்-ஹக், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். பாகிஸ்தான் அணி சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ரஹாட் அலிக்குப் பதிலாக, வலதுகை வேகப்பந்து வீச்சாளர் சொஹைல் கான் அணியில் இடம்பிடித்தார்.
தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி, மழை காரணமாக, 50.5 ஓவர்களுடன் முதலாவது நாள் ஆட்டம் கைவிடப்பட்டபோது, நான்கு விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
தற்போது களத்தில், அஸார் அலி 66 ஓட்டங்களுடனும், அசத் ஷபிக் நான்கு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக, பாபர் அஸாம் 23 ஓட்டங்களோடும், யுனிஸ் கான் 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில், அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜக்ஸன் பேர்ட் இரண்டு விக்கெட்டுகளையும், ஜொஷ் ஹேசில்வூட், நேதன் லையன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
தொடர்ந்து மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திவரும் நிக் மடின்சன், ஸ்குயார் லெக்கில் அபாரமான பிடியெடுப்பொன்றை எடுத்து தனது பிரசன்னத்தை அணியில் உணர வைத்திருந்தார்.
இன்று வீசப்படாத ஓவர்களை எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இன்றைய இரண்டாவது நாள் ஆட்டம், அரை மணித்தியாலம் முன்பதாக, இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 4.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
14 minute ago
46 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
46 minute ago
54 minute ago