2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பாரிய மாற்றங்களுக்கு லோதா குழு பரிந்துரை

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 05 , மு.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துமாறு, நீதியரசர் லோதா தலைமையிலான குழு, பரிந்துரை செய்துள்ளது.

இதன்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் வாக்களிப்பை, ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு என்ற கணக்கில் மட்டுப்படுத்தியுள்ளது. அத்தோடு, அமைச்சர்களும் பிரதானிகளும், சபையில் பதவிகளை வகிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதோடு, எந்தவொரு பதவிக்கும் ஒருவர், 2 முறை மாத்திரமே தெரிவுசெய்யப்பட அனுமதிக்கப்படுவர். தவிர, மாநில கிரிக்கெட் சபைகளில் பதவிகளை வகிப்போரோ அல்லது 70 வயதுக்கு மேற்பட்டோரோ, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் பதவிகளை வகிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தற்போது, 5 உப தலைவர்கள் காணப்படுகின்ற நிலையில், அதை ஒன்றாக மாற்றுமாறும், நபரொருவர், எந்தப் பதவியிலும் அதிகபட்சமாக 3 முறை மாத்திரமே காணப்படலாம் எனவும் அறிவிக்கப்படுகிறது. எந்தவொரு நபரும், தொடர்ந்து இரண்டு முறை தொடர்ந்து பதவி வகிக்க முடியாது எனவும் அறிவிக்கப்படுகிறது.

தலைவருக்குக் காணப்பட்ட மேலதிக வாக்கை இல்லாது செய்துள்ள இப்பரிந்துரை அறிக்கை, அணித்தெரிவில் அவரால் எந்தவிதமான தலையீடும் காணப்படக்கூடாது என அறிவித்துள்ளது.

வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்குமுகமாக, தகவலறியும் சட்டத்தின் கீழ் கிரிக்கெட் சபையைக் கொண்டுவருவதற்கும், பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைகள், கிரிக்கெட் சபை அதிகாரிகளை, அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .