Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் முன்னாள் முதல்நிலை வீரரும், தற்போதைய இரண்டாம் நிலை வீரருமான சேர்பியாவின் ஜோக்கோவிச், பயிற்சியாளர் பொரிஸ் பேக்கரிடமிருந்து பிரிந்துள்ளார்.
முன்னாள் விம்பிள்டன், ஐக்கிய அமெரிக்க, அவுஸ்திரேலிய பகிரங்க வெற்றியாளரான பொரிஸ் பேக்கருடன் மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றியமையைத் தொடர்ந்தே, 29 வயதான ஜோக்கோவிச் பிரிந்துள்ளார்.
12 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் வெற்றியாளரான ஜோக்கோவிச், பொரிஸ் பேக்கரின் கீழ் ஆறு கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றதுடன், இவ்வாண்டு ஜூன் மாதம் பிரெஞ் பகிரங்கப் பட்டத்தைக் கைப்பற்றியபோது, ஏககாலத்தில் நான்கு பிரதான பட்டங்களையும் கைவசம் வைத்திருந்தார்.
எவ்வாறெனினும், உலகின் 31ஆம் நிலை வீரரான ஐக்கிய அமெரிக்காவின் சாம் குவாரேயிடம் விம்பிள்டன் மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்த ஜோக்கோவிச், றியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதலாவது சுற்றிலேயே உலகின் 38ஆம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போத்ரோவிடம் தோல்வியடைந்தார்.
பின்னர், ஐக்கிய அமெரிக்க பகிரங்க இறுதிப் போட்டியில், உலகின் நான்காம் நிலை வீரரான ஸ்டான் வவ்றிங்காவிடம் தோல்வியுற்றதோடு, இவ்வாண்டு ஜூலை மாதத்துக்குப் பிறகு எந்தவொரு பட்டத்தையும் கைப்பற்றாத நிலையில், தற்போதைய உலகின் முதல்நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரேக்கு மேலதிகமாகப் பெற்றிருந்த 8,000 புள்ளிகளை இழந்திருந்தார்.
இந்நிலையில், இவ்வாண்டு நவம்பரில் இடம்பெற்ற பருவகால இறுதித் தொடரான ஏ.டி.பி உலக தொடர் இறுதிப் போட்டிகளில், மரேயிடம் தோல்வியுற்ற ஜோக்கோவிச், 122 வாரங்களுக்கு பிறகு தனது முதலிடத்தை இழந்திருந்தார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago