2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

பிளெஸிஸ் அதிரடி; அவுஸ்திரேலியாவை இலகுவாக வென்றது தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டியில் தென்னாபிரிக்க அணி, இலகுவான வெற்றியைப் பெற்றுள்ளது.

ஜொஹன்னர்ஸ்பேர்க்கில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 361 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் தனது 6ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டிச் சதத்தைப் பூர்த்திசெய்த அவர், 93 பந்துகளில் 111 ஓட்டங்களைப் பெற்றார். தவிர ஜே.பி.டுமினி 82 (58), றீலி றொஸோ 75 (81), டேவிட் மில்லர் 26 (17) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜோன் ஹேஸ்டிங்ஸ் 3 விக்கெட்டுகளையும் மிற்சல் மார்ஷ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

362 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 37.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 219 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 142 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் ட்ரவிஸ் ஹெட் 51 (45), டேவிட் வோணர் 50 (56), மத்தியூ வேட் 33 (3)) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் வெய்ன் பார்ணெல் 3 விக்கெட்டுகளையும் கஜிஸ்கோ றபடாவும் அன்டிலே ஃபெலுக்வாயோவும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக, ஃபப் டு பிளெஸிஸ் தெரிவானார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .