Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கிடையே, எதிர்வரும் வியாழக்கிழமை (20), சிட்டகொங்கில், ஆரம்பிக்கவுள்ள, முதலாவது போட்டிக்காண டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 14 பேர் கொண்ட குழாமாகவே இக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், இறுதியாக அறிவிக்கப்பட்ட பங்களாதேஷ் குழாமிலிருந்து ஆறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சகலதுறை வீரர் நசீர் ஹொஸைன், புறச் சுழற்பந்து வீச்சாளர் ஜுபைர் ஹொஸைன், வேகப்பந்து வீச்சாளர் ருபெல் ஹொஸைன் ஆகியோர் குழாமிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளதோடு, காயம் காரணமாக, துடுப்பாட்ட வீரர் லிட்டன் தாஸ், வேகப்பந்து வீச்சாளர்கள் மொஹமட் ஷாகிட், முஸ்டாபிசூர் ரஹ்மான் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.
இதேவேளை, சகலதுறை வீரர் சபீர் ரஹ்மான், முதன்முறையாக டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளதோடு, விக்கெட் காப்பாளர் நுருள் ஹஸன், வேகப்பந்துவீச்சாளர்கள், ஷஃபிக்குல் இஸ்லாம், கம்ருல் இஸ்லாம் றப்பி ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ளதோடு, சுழற்பந்து வீச்சாளர்கள் ஷுவகட்டா ஹொம், மெஹெடி ஹஸன் ஆகியோரும் குழாமில் இடம்பிடித்துள்ளனர்.
குழாம்: முஷ்பிகூர் ரஹீம் (தலைவர்), தமீம் இக்பால் (உப தலைவர்), இம்ரல் கைஸ், மொமினுல் ஹக், ஷகிப் அல் ஹஸன் மஹ்முதுல்லா, சௌமியா சர்க்கார், தஜிகுல் இஸ்லாம், மெஹெடி ஹஸன், சபீர் ரஹ்மான், கம்ருல் இஸ்லம், நுருல் ஹஸன். ஷஃபிகுல் இஸ்லாம், ஷுவகட்டா ஹொம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .