Shanmugan Murugavel / 2015 நவம்பர் 26 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின், பகலிரவு டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடும் எண்ணத்தை, நியூசிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. அடுத்தாண்டிலேயே, இதில் விளையாட நியூசிலாந்து விருப்பம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய நியூசிலாந்து அணிகளுக்கிடையில், உலகின் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையிலேயே, நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் இந்த எண்ணம் வெளிப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு பெப்ரவரி 20ஆம் திகதி முதல், நியூசிலாந்தின் உள்ளூர் தொடரில், பகலிரவு முதற்தரப் போட்டிகள் இடம்பெறவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்தே, டெஸ்ட் போட்டியொன்றில் விளையாட எதிர்பார்த்துள்ளதாகவும், நியூசிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் அணி, அடுத்தாண்டு நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், டிசெம்பரில் இவ்வாறான போட்டியொன்றை விளையாடுவது சிறப்பானது எனவும், நவம்பரில் விளையாடுவதைப் பற்றி ஆராய்ந்தாலும், அதற்குக் காலம் போதாது என்பதால், டிசெம்பரைப் பற்றி ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடம் நேரடியாக எதுவும் கேட்கப்படவில்லை என, அச்சபை தெரிவித்துள்ளது.
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026