Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் இன்று (26) இடம்பெற்ற முதலாவது போட்டியில், நியூசிலாந்து அணி 77 ஓட்டங்களினால் இலகுவாக வெற்றியீட்டியது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அந்த வகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 341 ஓட்டங்களைப் பெற்றது.
31, 79, 134, 158 ஓட்டங்களுக்கு முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது விக்கெட்டுகள் சீராக வீழ்த்தப்பட்டாலும், ஐந்தாவது விக்கெட்டுகாக ஜோடி சேர்ந்த டொம் லேதம், கொலின் மன்றோ பெற்ற 158 ஓட்ட இணைப்பாட்டம் காரணமாகவே பெரிய ஓட்ட எண்ணிக்கையை நியூசிலாந்து அணியால் அடைய முடிந்தது.
துடுப்பாட்டத்தில், நியூசிலாந்து அணி சார்பாக டொம் லேதம் 137(121), கொலின் மன்றோ 87(61), கேன் வில்லியம்சன் 31(36), நீல் ப்றூம் 22(32) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், பங்களாதேஷ் அணி சார்பாக, ஷகிப் அல் ஹஸன் மூன்று விக்கெட்டுகளையும், முஸ்தபிஸுர் ரஹ்மான், தஸ்கின் அஹமட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
341 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 44.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் 264 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 77 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
பங்களாதேஷ் அணியின் இனிங்ஸில், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட, ஒரு ஓவருக்கு பெறவேண்டிய ஓட்டங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது. ஷகிப் அல் ஹஸன், முஷ்பிகூர் ரஹீம் ஆகியோர் களத்தில் நின்றபோதே பங்களாதேஷ் அணி ஓரளவுக்கு ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஷகிப் அல் ஹஸன் ஆட்டமிழக்கும்போதாவது வெற்றிபெறலாம் என்ற நிலை காணப்பட்டபோதும், உபாதை காரணமாக முஷ்பிகூர் ரஹீம் களத்திலிருந்து வெளியேறும்போது, ஏறத்தாழ முற்றுமுழுதாக வெற்றிபெறும் நிலை இல்லாமல் போயிருந்தது, எனினும், இறுதி வரை ஆட்டமிழக்காது இருந்த மொஷாதிக் ஹொஸைன் போராடியிருந்தார்.
துடுப்பாட்டத்தில், பங்களாதேஷ் அணி சார்பாக ஷகிப் அல் ஹஸன் 59(54), மொஷாதிக் ஹொஸைன் ஆட்டமிழக்காமல் 50(44), முஷ்பிகூர் ரஹீம் 42(48), தமீம் இக்பால் 38(59) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், நியூசிலாந்து சார்பாக ஜேம்ஸ் நீஷம், லொக்கி பெர்கியூசன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும், டிம் சௌதி இரண்டு விக்கெட்டுகளையும், மிற்சல் சான்ட்னெர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக டொம் லேதம் தெரிவானார்.
25 minute ago
28 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
28 minute ago
1 hours ago
1 hours ago