Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2021 செப்டெம்பர் 06 , பி.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து அணி பங்களா தேஷத்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் பங்களாதேஷ் அணி வென்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டி20 போட்டி நேற்று முன்தினம் (05) நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்து ஆடியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ஓட்டங்களை பெற்றது. அதிகபட்சமாக ஹென்றி நிகோலஸ் 36 ஓட்டங்களும் டாம் பிளெண்டல் 30 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையடுத்து, 129 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணியினரின் பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில், பங்களாதேஷம் 19.4 ஓவரில் 76 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாக தோற்றது.
நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டுகளும், மெக்கன்சி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. அத்துடன், டி20 தொடரில் 2-1 என பின்தங்கியுள்ளது. ஆட்ட நாயகன் விருது அஜாஸ் படேலுக்கு வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
20 May 2025
20 May 2025