2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

‘பங்களாதேஷுக்காக ஷகிப் மீண்டும் விளையாட மாட்டார்’

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 01 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்காக ஷகிப் அல் ஹஸன் மீண்டும் விளையாட மாட்டாரென அந்நாட்டின் விளையாட்டு ஆலோசகர் ஆசிர்ஃப் மஹ்மூட் பிரகடனப்படுத்தியுள்ளார்.

பதவியிலிருந்து அகற்றப்பட்ட பங்களாதேஷின் பிரதமர் ஷேய்க் ஹசீனாவுக்கு அவரது பிறந்தநாளில் ஷகிப் ஞாயிற்றுக்கிழமை (28) வாழ்த்துத் தெரிவித்தத்தையடுத்தே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

ஹசீனாவின் அவாமி லீக்கின் பாராளுமன்ற உறுப்பினராக ஷகிப் காணப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கெதிரான டெஸ்ட்களில் கடந்தாண்டு விளையாடியிருந்தபோதும் கடந்த 12 மாதங்களாக பங்களாதேஷ் அணிக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .