2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பங்களாதேஷுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் முன்னிலையில் இலங்கை

Shanmugan Murugavel   / 2022 மே 26 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மிர்பூரில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டின் இன்றைய நான்காம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை முன்னிலையில் காணப்படுகிறது.

இன்றைய நான்காம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த இலங்கை, அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் மூலம் தொடர்ச்சியாக ஓட்டங்களைக் குவித்த நிலையில் 124 ஓட்டங்களுடன் சந்திமால் எபொடொட் ஹொஸைனிடம் வீழ்ந்ததுடன், அடுத்து வந்தோர் வரிசையாக ஷகிப் அல் ஹஸன் (2), எபொடொட் ஹொஸைனிடம் வீழ்ந்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 506 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஷகிப் அல் ஹஸன் 5, எபொடொட் ஹொஸைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்குத் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், அசித பெர்ணாண்டோ (2), கசின் ராஜிதவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து நேற்றைய நான்காம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 34 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், முஷ்பிக்கூர் ரஹீம் 14 ஓட்டங்களுடனும், லிட்டன் தாஸ் ஓர் ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 365/10 (துடுப்பாட்டம்: முஷ்பிக்கூர் ரஹீம் ஆ.இ 175, லிட்டன் தாஸ் 141 ஓட்டங்கள். பந்துவீச்சு: கசுன் ராஜித 5/64, அசித பெர்ணாண்டோ 4/93)

இலங்கை: 506/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் ஆ.இ 145, தினேஷ் சந்திமால் 124, திமுத் கருணாரத்ன 80, தனஞ்சய டி சில்வா 58, ஒஷாட பெர்ணாண்டோ 57 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகிப் அல் ஹஸன் 5/96, எபொடொட் ஹொஸைன் 4/148)

பங்களாதேஷ்: 34/4 (பந்துவீச்சு: அசித பெர்ணாண்டோ 2/12, கசுன் ராஜித 1/12)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .