Shanmugan Murugavel / 2022 ஜூன் 28 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள், சென். லூசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து இன்று அதிகாலை முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டையும் வென்றமையைத் தொடர்ந்தே 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.
நான்காம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பங்களாதேஷ் அல்ஸாரி ஜோசப், ஜேடன்ன் சியல்ஸிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களையே பெற்றது. நுருல் ஹஸன் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்நிலையில், 13 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் கைல் மேயர்ஸ் தெரிவானார்.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மே. தீவுகள்
பங்களாதேஷ்: 234/10 (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் 53, தமிம் இக்பால் 46, ஷொரிஃபுல் இஸ்லாம் 26, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 26, அனமும் ஹக் 23, எபொடொட் ஹொஸைன் ஆ.இ 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: அல்ஸாரி ஜோசப் 3/55, ஜேடன் சியல்ஸ் 3/53, அன்டர்சன் பிலிப் 2/30, கைல் மேயர்ஸ் 2/35)
மே. தீவுகள்: 408/10 (துடுப்பாட்டம்: கைல் மேயர்ஸ் 146, கிறேய்க் பிறத்வெய்ட் 51, ஜோன் கம்பெல் 45, ஜெர்மைன் பிளக்வூட் 40, ஜோஷுவா டா சில்வா 29, றேமன் றீஃபயர் 22, கேமார் றோச் ஆ.இ 18 ஓட்டங்கள். பந்துவீச்சு: காலிட் அஹ்மட் 5/106, மெஹிடி ஹஸன் மிராஸ் 3/91, ஷொஃரிபுல் இஸ்லாம் 2/76)
பங்களாதேஷ்: 186/10 (துடுப்பாட்டம்: நுருல் ஹஸன் ஆ.இ 60, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 42 ஓட்டங்கள். பந்துவீச்சு: கேமார் றோச் 3/54, அல்ஸாரி ஜோசப் 3/57, ஜேடன் சியல்ஸ் 3/21)
போட்டியின் நாயகன்: கைல் மேயர்ஸ்
தொடரின் நாயகன்: கைல் மேயர்ஸ்
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago