2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திலிருந்து ஹோல்டர், பொலார்ட் விலகல்

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 30 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொவிட்-19 தொடர்பான அச்சம் காரணமாக, பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திலிருந்து மேற்கிந்தியத் தீவுகளின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைவர் கெரான் பொலார்ட் உள்ளிட்டோர் விலகியுள்ளனர்.

ஹோல்டர், பொலார்ட் தவிர, டரன் பிராவோ, ஷமராஹ் ப்ரூக்ஸ், ஷெல்டன் கோட்ரல், எவின் லூயிஸ், ஷே ஹோப், ஷிம்ரோன் ஹெட்மயர், நிக்கலஸ் பூரான் ஆகியோரும் கொவிட்-19 பிரச்சினைகள் காரணமாக குறித்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவில்லை என மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் வெளியீடொன்று தெரிவிக்கின்றது.

இதேவேளை, தனிப்பட்ட காரணங்களுக்காக பேபியன் அலென், ஷேன் டெளரிச் ஆகியோரும் இச்சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவில்லை.

ஹோல்டர் இல்லாத நிலையில் கிறேய்க் பிறத்வெய்ட் டெஸ்ட் அணிக்குத் தலைமை தாங்கவுள்ளதுடன், பொலார்ட் இல்லாத நிலையில் ஜேஸன் மொஹமட் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணிக்குத் தலைமை தாங்கவுள்ளார்.

டெஸ்ட் குழாம்: கிறேய்க் பிறத்வெய்ட் (அணித்தலைவர்), ஜெர்மைன் பிளக்வூட், என்குரூமாஹ் பொன்னர், ஜோன் கம்பெல், ரஹீம் கொர்ன்வெல், ஜோஷுவா டா சில்வா, ஷனொன் கப்ரியல், கவெம் ஹொட்ஜ், அல்ஸாரி ஜோசப், கைல் மேயர்ஸ், ஷேன் மொஸெலி, வீராசாமி பெருமாள், கேமார் றோச், றேமன் றெய்ஃபர், ஜோமெல் வொரிக்கான்.

ஒ.ச.போ குழாம்: ஜேஸன் மொஹமட் (அணித்தலைவர்), சுனில் அம்பிறிஸ் (உப அணித்தலைவர்), என்குரூமாஹ் பொன்னர், ஜோஷுவா டா சில்வா, ஜஹ்மார் ஹமில்டன், சேமர் ஹோல்டர், அகீல் ஹொஸைன், அல்ஸாரி ஜோசப், கைல் மேயர்ஸ், அன்ட்ரே மக்கார்த்தி, கெஜோர்ட் ஒட்லே, றொவ்மன் பவல், றேமன் றீஃபயர், றொமாரியோ ஷெப்பர்ட், ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X