Shanmugan Murugavel / 2017 ஜனவரி 05 , மு.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் பணிப்பாளராக, அவ்வணியின் முன்னாள் தலைவர் ஜிம்மி அடம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணியின் தலைமைப் பயிற்றுநர் பதவிக்கே, அடம்ஸ் விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால் கிரிக்கெட் பணிப்பாளர் பதவியை ஏற்குமாறு கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தனக்கு வழங்கப்பட்ட பதவியை அவர் ஏற்கெனவே ஏற்றுள்ள போதிலும், வேறு சில விடயங்கள் தொடர்பாக, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையுடன் அவர் பேரம் பேசி வருவதாகவும், எனவே இதுவரையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை எனவும் அறிவிக்கப்படுகிறது.
49 வயதான ஜிம்மி அடம்ஸ், அணி வீரர்களினதும் கிரிக்கெட் சபையினதும் நம்பிக்கையைப் பெற்றவர் எனக் கருதப்படுகிறது.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026