Freelancer / 2022 ஜனவரி 15 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என தோல்வியடைந்தது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விராட் அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இருபதுக்கு 20, ஒரு நாள் அணிகளின் தலைவர் பதவியிலிருந்து ஏற்கெனவே விராட் கோலி விலகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"இந்திய அணியின் டெஸ்ட் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. மேலும், இந்திய அணியின் தலைவராக நீண்ட நாட்களாக பணியாற்ற வாய்ப்பு வழங்கியமைக்காக பிசிசிஐக்கு நன்றி" என்று தனது டுவிட்டர் பதிவில் கோலி குறிப்பிட்டுள்ளார்.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026