2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்துக்கு வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவு அணிக்குமுிடையிலான 50 ஓவர் கிரிக்கெட் பயிற்சிப் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

ஃபதுல்லாவில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் தெரிவு அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 309 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் இம்ருல் கைஸ் 121 (91), முஷ்பிகூர் ரஹீம் 51 (57), நசீர் ஹொஸைன் 46 (45), நஸ்முல் ஹொஸைன் ஷான்டோ 36 (46) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 3, டேவிட் வில்லி 2, பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

310 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 46.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றிபெற்றது. துடுப்பாட்டத்தில் ஜொஸ் பட்லர் ஆட்டமிழக்கமல் 80 (64), மொயின் அலி 70 (51), ஜேம்ஸ் வின்ஸ் 48 (39) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் எபடற் ஹொஸைன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .