Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், செல்சியின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.
யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மத்தெயுஸ் குன்ஹா பெற்றார்.
இதேவேளை தமது மைதானத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்ற பிறைட்டன் ஹொவ் அல்பியனுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சமப்படுத்தியது.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 70 புள்ளிகளுடன் ஆர்சனல் முதலாமிடத்தில் உள்ளது. 64 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியும் 58 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும் 55 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அஸ்டன் வில்லாவும் காணப்படுகின்றன. இதில் ஏனைய அணிகளை விட யுனைட்டெட் ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளதுடன் சிற்றி ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
5 minute ago
15 minute ago
18 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
18 minute ago
30 minute ago