2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பாகிஸ்தானுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 27 , பி.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாகிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. 

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்ற ஆப்கானிஸ்தான், ஷார்ஜாவில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்தது. 

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் பதிலணித்தலைவர் ஷடாப் கான், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். 

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், இமாட் வஸீம் ஆட்டமிழக்காமல் 64 (57), ஷடாப் கான் 32 (25), மொஹமட் ஹரிஸ் 15 (09) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பஸல்ஹக் பரூக்கி 4-1-19-2, அணித்தலைவர் ரஷீட் கான் 4-0-16-1, கரிம் ஜனட் 3-0-13-1, நவீன்-உல்-ஹக் 4-0-26-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர். 

பதிலுக்கு 131 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 44 (49), இப்ராஹிம் ஸட்ரான் 38 (40), நஜிபுல்லாஹ் ஸட்ரான் ஆட்டமிழக்காமல் 23 (12), மொஹமட் நபி ஆட்டமிழக்காமல் 14 (09) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஸமன் கான் 3.5-0-22-1, இஹசனுல்லாஹ் 3-0-23-1, மொஹமட் நவாஸ் 4-0-16-0, ஷடாப் கான் 4-0-24-0, இமாட் வஸீம் 1-0-5-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர். 

இப்போட்டியின் நாயகனாக பஸல்ஹக் பரூக்கி தெரிவானார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .