Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 09 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாபிரிக்கா பங்குபற்றும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், லாகூரில் சனிக்கிழமை (08) நடைபெற்ற ஆரம்பப் போட்டியில் நியூசிலாந்து வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, கிளென் பிலிப்ஸின் ஆட்டமிழக்காத 106 (74), டரைல் மிற்செல்லின் 81 (84), கேன் வில்லியம்சனின் 58 (89), மிஷெல் பிறேஸ்வெல்லின் 31 (23), றஷின் றவீந்திரவின் 25 (19) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 330 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், அப்ரார் அஹ்மட் 2, ஹரிஸ் றாஃப் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு 331 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், மிஷெல் பிறேஸ்வெல் (2), அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர் (3), பிலிப்ஸ், மற் ஹென்றியிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 254 ஓட்டங்களையே பெற்று 78 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பக்கர் ஸமன் 84 (69), சல்மான் அக்ஹா 40 (51), தயப் தஹிர் 30 (29), அப்ரார் அஹ்மட் ஆட்டமிழக்காமல் 25 (15) ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக பிலிப்ஸ் தெரிவானார்.
24 minute ago
30 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago
43 minute ago