2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாகிஸ்தானை வீழ்த்துமா மேற்கிந்தியத் தீவுகள்?

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரானது, ஜமைக்காவில் இலங்கை நேரப்படி நாளை இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது டெஸ்டுடன் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஐந்தாமிடத்தில் பாகிஸ்தானும், ஏழாமிடத்தில் மேற்கிந்தியத் தீவுகளும் இருக்கின்றபோதும், சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகள் பலமானதாகவே காணப்படுகின்றது.

அந்தவகையில், கேமார் றோச், ஜேடன் சியல்ஸ், அல்ஸாரி ஜோசப், ஜேஸன் ஹோல்டர் ஆகியோரை பாபர் அஸாம், மொஹமட் றிஸ்வான், பவாட் அலாம் ஆகியோர் எவ்வாறு எதிர்கொள்கின்றர் என்பதிலேயே இந்த டெஸ்ட் தொடரின் முடிவு தங்கியுள்ளது.

தவிர ஹஸன் அலி, ஷகீன் ஷா ஆகியோரும் மீளக் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ள மொஹமட் அப்பாஸ், நசீம் ஷா ஆகியோரும் முக்கியமானவராகக் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .