Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 22 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இன்று மாலை 4.30மணிக்கு இடம்பெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
இன்னும் இரண்டு மாதங்களுக்கும் சற்றுக் கூடுதலான நாட்களே உலகக் கிண்ணத்துக்கு இருக்கின்ற நிலையில், தத்தமது உலகக் கிண்ணக் குழாம்களை இரண்டு அணிகளும் இறுதிப்படுத்திக் கொள்வதற்கான இறுதிச் சந்தர்ப்பமாக குறித்த தொடர் காணப்படுகின்றது.
அந்தவகையில், அணித்தலைவர் சப்ராஸ் அஹமட், பாபர் அஸாம், ஷடாப் கான், ஃபக்கர் ஸமன், ஷகீன் ஷா அஃப்ரிடி, ஹசன் அலி உள்ளிட்டோருக்கு பாகிஸ்தான் ஓய்வளித்துள்ள நிலையில், குழாமுக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ள உமர் அக்மல், ஜுனைட் கான், யசீர் ஷா, ஹரீஸ் சொஹைல் ஆகியோர் தமது திறமைகளை சிறந்த வாய்ப்பாக இத்தொடர் காணப்படுகிறது.
இவர்கள் தவிர, முதன்முறையாக பாகிஸ்தான் குழாமொன்றில் இடம்பிடித்துள்ள இளம் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஹஸ்னைன், ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் முதற்தடவையாக இடம்பிடித்துள்ள வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் அப்பாஸ் உள்ளிட்டோரும் தமது திறமைகளை வெளிப்படுத்தி உலகக் கிண்ணக் குழாமில் இடம்பிடிப்பதற்கு இத்தொடர் சிறந்த வாய்பாகக் காணப்படுகிறது.
இதேவேளை, மறுபக்கமாக இந்திய அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் உஸ்மான் கவாஜா, பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப், அஸ்தன் தேணர் ஆகியோர் பிரகாசித்திருந்தபோதும், டேவிட் வோணரும், ஸ்டீவ் ஸ்மித்தும் உலகக் கிண்ணத்தில் அணிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றநிலையில், உலகக் கிண்ணக் குழாமில் தமது இடங்களை உறுதிப்படுத்துவதற்கு தொடர்ச்சியான பெறுபேற்றை மீண்டும் வெளிப்படுத்திய வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகின்றனர்.
இவர்கள் தவிர, உலகக் கிண்ணம் நெருங்குகின்ற நிலையில், தமது அணித்தலைவர் ஆரோன் பின்ஞ்சிடமிருந்து தொடர்ச்சியான பெறுபேறுகளை அவுஸ்திரேலியா எதிர்பார்ப்பதுடன், கடந்தாண்டு சிறப்பாகச் செயற்பட்டபோதும் இவ்வாண்டுப் போட்டிகளில் தடுமாறுகின்ற ஷோண் மார்ஷிடமிருந்தும் ஓட்டங்களை எதிர்பார்த்துள்ளது.
இந்நிலையில், இந்திய அணிக்கெதிரான தொடரில் அடம் ஸாம்பா, நேதன் லையன் ஆகியோர் சிறப்பாகச் செயற்பட்டிருந்தபோதும் அவர்களும் தொடர்ச்சியாக சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திலுள்ளனர். ஏனெனில், பிக் பாஷ் லீக், பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் ஃபவட் அஹமட் சிறப்பாகச் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, மிற்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட் ஆகியோர் மீளவரும் பட்சத்திலும் தனது இடத்தை உறுதிப்படுத்துவதற்கு வேகப்பந்துவீச்சாளர் ஜஹை றிச்சர்ட்ஸனும் தொடர்ச்சியான சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.
24 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago