Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 02 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக் தொடரில், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் மைதானத்தில் இன்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.
பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக செனி மயுலு, கொன்கலோ றாமோஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை பெரன் டொரஸ் பெற்றிருந்தார்.
இதேவேளை இன்னொரு லீக் 1 கழகமான மொனாக்கோவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றிக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. சிற்றி சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் எர்லிங் ஹலான்ட் பெற்றார். மொனாக்கோ சார்பாக ஜோர்டான் டெஸே, எரிக் டயர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் மற்றொரு லா லிகா கழகமான வில்லாறியலின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago