Shanmugan Murugavel / 2025 ஜனவரி 27 , பி.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், லேஸியோவின் மைதானத்தில் திங்கட்கிழமை (27) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பியொரென்டினா வென்றது.
பியொரென்டினா சார்பாக யசினே அடில், லூகாஸ் பெல்ரன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை அடம் மருசிச் பெற்றிருந்தார்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 53 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நாப்போலி காணப்படுகின்றது. 50 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலனும், 46 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லாண்டாவும், 39 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் லேஸியோவும் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட இன்டர் மிலன் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
18 minute ago
24 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
37 minute ago