Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மே 19 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில், 2-3 என்ற கோல் கணக்கில் சம்பியன்கள் மன்செஸ்டர் சிற்றி தோற்றது.
சிற்றி சார்பாக, இல்கி குன்டோகன், பில் பொடென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பிறைட்டன் சார்பாக, லியன்ட்ரோ ட்ரோஸார்ட், அடம் வெப்ஸ்டர், டான் பேர்ன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், புல்ஹாமுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை எடின்சன் கவானியும், புல்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோ பிரயனும் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், செல்சியின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், லெய்செஸ்டர் சிற்றிக்குமிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றிருந்தது. செல்சி சார்பாக, அந்தோனியோ ருடிகர், ஜோர்ஜினியோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, லெய்செஸ்டர் சார்பாகப் பெறப்பட்ட கோலை கெலச்சி லெஹாஞ்சோ பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
2 hours ago