Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரே கழகத்தில் அதிக கோல்கள் பெற்ற பிரேஸிலின் பீலேயின் சாதனையை, ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் அணித்தலைவரான லியனல் மெஸ்ஸி சமப்படுத்தியுள்ளார்.
பார்சிலோனாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற வலென்சியாவுக்கெதிரான போட்டியின்போதே குறித்த சாதனையை மெஸ்ஸி சமப்படுத்தியிருந்தார்.
பிரேஸிலியக் கழகமான சன்டோஸுக்காக 643 கோல்களைப் பெற்ற பீலேயின் சாதனையையே மெஸ்ஸி சமப்படுத்தியுள்ளார்.
இப்போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் பார்சிலோனா முடித்திருந்தது.
மெஸ்ஸி தவிர பார்சிலோனா சார்பாக, றொனால்ட் அரயுஜோவும் ஒரு கோலைப் பெற்றிருந்தார். வலென்சியா சார்பாக, மூக்டார் டியக்கபி, மக்ஸிமில்லியனோ கோமேஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், லா லிகாவில் செவில்லாவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், றியல் வல்லடொலிட்டுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. செவில்லா சார்பாகப் பெறப்பட்ட கோலை லூகஸ் ஒக்கொம்பஸ் பெற்றதோடு, வல்லடொலிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை றாவுல் கர்சியா பெற்றிருந்தார்.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026